உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? கமல்ஹாசன் ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவையில் அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகக் கூறி ஆன்லைன் பத்திரிகை நிறுவனர் மற்றும் அவரது பத்திரிகையில் பணிபுரியும் இருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்பட பலர் அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது கருத்தை ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்
— Kamal Haasan (@ikamalhaasan) April 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout