தளரா மனம் கொண்ட தமிழன் வெற்றி பெற்ற நாள்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,January 23 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கமல்ஹாசன் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி கண்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெறுவதை அடுத்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா. சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றி. வாழ்க நற்றமிழர்! என்று பதிவு செய்துள்ளார்.

உலகமே வியந்து நோக்கிய ஜல்லிக்கட்டு போராட்டம் சென்னை மெரீனாவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் நடத்தப்பட்டு வெற்றி கண்டது. இந்த வெற்றியை தமிழகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வரும் நிலையில் கமல்ஹாசன் மேற்கண்ட டுவீட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.