இயக்குனர் ஐவி சசி மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்

  • IndiaGlitz, [Tuesday,October 24 2017]

பழம்பெரும் இயக்குனர் ஐ.வி.சசி இன்று சென்னையில் காலமானார் என்ற செய்தியை சற்றுமுன்னர் பார்த்தோம். ஐவி சசியின் மறைவிற்கு திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி தெரிவித்தும் நேரில் இறுதி மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ஐவி சசியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார். அவர் தனது டுவிட்டரில், 'நெடுங்கால நண்பரும் இணையிலா சினிமா தொழில் விற்பன்னருமான ஐ.வி.சசி காலமானார். என் சகோதரி சீமா சசிக்கும், குடும்பத்தாருக்கும் அன்பும் அனுதாபமும்' என்று தெரிவித்துள்ளார்

கமல்ஹாசன் நடிப்பில் உருவான குரு, அலாவுதீன் அற்புத விளக்கும் போன்ற தமிழ் படங்களையும், ஈட்டா, விருதம், ஆனந்தம் பிரம்மானந்தம் போன்ற மலையாள படங்களையும், கரிஷ்மா என்ற இந்தி படத்தையும் ஐவி சசி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகர் மாதவன் வாங்கிய ரூ.40 லட்சம் மதிப்புள்ள பைக்

நடிகர் மாதவன் மோட்டார் சைக்கிள் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கடந்த தீபாவளி தினத்தன்று இந்தியன் ரோட்மாஸ்டர் என்று கூறப்படும் பைக்கை வாங்கியுள்ளார்.

ரஜினியின் '2.0' இசைவெளியீட்டு விழா! துபாய் அரசர் கலந்து கொள்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தை சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

என்னங்க சார் உங்க நியாயம்: பாஜகவினர்களுக்கு பிக்பாஸ் ஆர்த்தி கேள்வி

நகைச்சுவை நடிகையும் பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவருமான ஆர்த்தி தனது சமூக வலைதளத்தில் அவ்வப்போது அரசியல் நையாண்டி கருத்துக்களை கூறி வரும் நிலையில்

கமல், ரஜினி படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் காலமானார்.

ரஜினிகாந்த் நடித்த 'காளி', கமல்ஹாசன் நடித்த குரு' உள்பட பல தமிழ், மலையாளம் இந்தி படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் ஐ.வி.சசி காலமானார். அவருக்கு வயது 69

கொஞ்சம் பார்த்து செய்யுங்க சார்! எச்.ராஜாவை கிண்டல் செய்யும் இயக்குனர்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கோடிக்கணக்கில் புரமோஷனுக்காக செலவு செய்தது. ஆனால் அந்த புரமோஷன் செய்யாத பரபரப்பை தமிழக பாஜக தலைவர்கள் ஏற்படுத்தினார்கள்.