எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் இயற்கை எய்திவிட்டார்: கமல்ஹாசன் இரங்கல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் இயற்கை எய்திவிட்டார் என உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் வசன கர்த்தாவாக இருந்தவர் கிரேசி மோகன். இவர் கமல்ஹாசன் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் என்பது தெரிந்ததே. குறிப்பாக மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக கிரேசி மோகன் காலமானார். இந்த நிலையில் அவரது மனைவி நளினி கிரேசி மோகன் நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்.
எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 18, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com