ஞானியின் குடும்பத்தார்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், நாடகக்கலைஞர் என பல்வேறு அவதாரங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய ஞானி இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரது மறைவு பத்திரிக்கை மற்றும் எழுத்தாளர் துறைக்கு பெரும் இழப்பாக உள்ளது.
ஞானியின் மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஞானி இறக்கும் முன் தனது உடலை மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உடல்தானம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் மறைந்த ஞானி அவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை கூறியுள்ளார். மேலும் அவரது உடல்தானம் செய்யப்பட்டிருப்பதற்கும், அதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டு உடலை ஒப்படைத்ததற்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
திரு. ஞாநியின் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் செய்த உடல்தானம் போற்றுதலுக்குரியது. அவர் தானத்திற்கு சடங்குகள் தடையாகாமல் அனுமதித்த குடும்பத்தாரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com