மக்களையும் நதிகளையும் காக்காத ரூ.20,000 கோடி: கமல்ஹாசன் டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
கங்கை நதியை தூய்மைப்படுத்த 20,000 கோடி செலவு செய்தும் கங்கை நதியும் காக்கப்படவில்லை, அந்த நதியை நம்பியிருக்கும் மக்களையும் காக்கவில்லை என கமலஹாசன் டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை கங்கை நதியில் தூக்கி வீசப்படுவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு தூக்கி வீசப்படும் பிணங்கள் கங்கை நதியில் மிதந்து வருவதாகவும் அவை அழுகி சுற்றுச்சூழலை கெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த அதிர்ச்சித் தகவல்கள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கனவே மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:
ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன. மக்களையும் காக்கவில்லை. நதிகளையும் காக்கவில்லை. ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாகக் கலைகின்றன.
ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன. மக்களையும் காக்கவில்லை. நதிகளையும் காக்கவில்லை. ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாகக் கலைகின்றன.
— Kamal Haasan (@ikamalhaasan) May 12, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments