மக்களையும் நதிகளையும் காக்காத ரூ.20,000 கோடி: கமல்ஹாசன் டுவிட்

  • IndiaGlitz, [Wednesday,May 12 2021]

கங்கை நதியை தூய்மைப்படுத்த 20,000 கோடி செலவு செய்தும் கங்கை நதியும் காக்கப்படவில்லை, அந்த நதியை நம்பியிருக்கும் மக்களையும் காக்கவில்லை என கமலஹாசன் டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை கங்கை நதியில் தூக்கி வீசப்படுவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு தூக்கி வீசப்படும் பிணங்கள் கங்கை நதியில் மிதந்து வருவதாகவும் அவை அழுகி சுற்றுச்சூழலை கெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த அதிர்ச்சித் தகவல்கள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கனவே மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன. மக்களையும் காக்கவில்லை. நதிகளையும் காக்கவில்லை. ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாகக் கலைகின்றன.

More News

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்: லதா ஆரத்தி எடுக்கும் வீடியோ வைரல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தான் நடித்துக்கொண்டிருக்கும் 'அண்ணாத்த' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருந்தார்.

இணையத்தை கலக்கும் ஸ்ரீதர் மாஸ்டர் மகளின் நடன வீடியோ

தமிழ் திரை உலகில் நடன இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீதர் மாஸ்டர் தனது மகளுடன் ஆடிய டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது 

சீரியல் காதல்....செழியனை காதலிக்கும் செம்பருத்தி...! கூடிய சீக்கிரம் டும் டும் டும்...!

செம்பருத்தி தொடரில் நடித்து வரும் கதாநாயகியான  ஷபானா தனது காதலர் யார் என்று இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

காலியான எம்.பி பதவிகள்...! திமுக -வில் யாருக்கு வாய்ப்பு..?

தமிழகத்தில் 3 எம்.பி பதவிகள்  காலியாக இருப்பதால்,  விரைவில் தேர்தல் நடக்கவிருப்பதாகவும்,

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஓபிஎஸ் மறுத்தது ஏன்? உண்மையை உடைக்கும் வீடியோ!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சி 75 இடங்களில் வெற்றிப்பெற்று தோல்வியைத் தழுவியது.