90 வயது நண்பரை இழந்துவிட்டேன்: கமல்ஹாசன் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும் தன்னுடைய நெருங்கிய நண்பருமான ஜான் கிளாட் கேரியார் என்பவரை இழந்துவிட்டேன் என்று கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் ஜான் கிளாட் கேரியார். இவரது புத்தகங்கள் உலகம் முழுவதும் பிரபலம் என்பதும் இவருக்கு கோடிக்கணக்கான வாசகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக தனது 90 ஆவது வயதில் எழுத்தாளர் ஜான் கிளாட் கேரியார் அவர்கள் இன்று காலமானார். இதனை அடுத்து உலகின் முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் ரசிகர்கள் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது: தனது 90ஆவது வயதில் அடியெடுத்து வைத்த உலகின், ஃபிரான்ஸ் நாட்டின், மிக முக்கிய எழுத்தாளரும், என் நண்பருமான ஜான் கிளாட் கேரியார் இன்று காலமானார். அவர் எழுத்துக்களும் மனித நேயமும் அவர் தொட்ட மனங்களால் தொடர்ந்து வாழும்’ என்று பதிவு செய்துள்ளார்.
தனது 90ஆவது வயதில் அடியெடுத்து வைத்த உலகின், ஃபிரான்ஸ் நாட்டின், மிக முக்கிய எழுத்தாளரும், என் நண்பருமான ஜான் கிளாட் கேரியார் இன்று காலமானார் அவர் எழுத்துக்களும் மனித நேயமும் அவர் தொட்ட மனங்களால் தொடர்ந்து வாழும்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 9, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout