இவருக்கு முன் என் தந்தை கைகட்டி நின்றார்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Friday,June 18 2021]

அரசியல்வாதிகளில் நேர்மைக்கும் எளிமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளவர் யார் என தற்போதைய அரசியல்வாதிகளை கேட்டால் கைவிரலில் எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே இருப்பார்கள். ஆனால் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் எளிமையின் சிகரமாக பல அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்பதும் அவர்களில் ஒருவர் காமராஜர் அமைச்சரவையில் இருந்த கக்கன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்கள் தான் சாகும் போது கூட அவரது பெயரில் ஒரு ரூபாய் சொத்து கூட இல்லை என்று கூறப்படுவது உண்டு. அந்த அளவுக்கு எளிமை மட்டுமின்றி நேர்மையும் அவரிடம் இருந்தது என்பதால் தான் அவர் இன்றுவரை போற்றி புகழப்படுகிறார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் உள்பட பலர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனின் தந்தை ஒரு பழம்பெரும் காங்கிரஸ்வாதி என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தனது தந்தை கக்கன் முன் கைகட்டி நிற்பதை பெருமையாக கருதினர் என்று கூறி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது:

கக்கனுக்கு முன்பு கைகட்டி நிற்பதைப் பெருமையாகக் கருதியவர் என் தந்தை. அதிகாரத்தால் அல்ல எளிமையால் ஒரு தலைமுறையையே ஈர்த்த தேசபக்தர் கக்கன். ஒரொரு நாளும் நினைவுகூரத்தக்க ஆளுமையை அவரது பிறந்தநாளில் போற்றுவோம்.