இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம்: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை அடுத்து அவருடைய உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் இன்று கொரோனாவால் தாக்கப்பட்டு உயிரிழந்த சென்னையை சேர்ந்த சைமன் என்ற மருத்துவரை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் மற்றும் அண்ணாநகர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பெரும் பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் 20 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களது உடலிலிருந்து யாருக்கும் வைரஸ் பரவாது என்று உலக சுகாதார மையமே தெரிவித்துள்ள நிலையில் இது குறித்த விழிப்புணர்வு இல்லாத பொதுமக்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலைக் கூட அடக்கம் செய்யவிடாமல் போராட்டம் நடத்துவது அறியாமையின் உச்சமாகவே கருதப்படுகிறது
இந்த நிலையில் இந்த சம்பவத்தை பெரும்பாலானோர் கண்டித்து வரும் நிலையில் தற்போது உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: கொல்லும் கொரோனா கூட சாதி, மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ, நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக்கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ,நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து,இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக்கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 20, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout