முதலிடத்தை நோக்கி நகர்கிறது தமிழகம்: கமல்ஹாசன் கிண்டல்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் மத்திய மாநில அரசுகளை விமர்சனம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவர் மத்திய மாநில அரசுகளை ’பால்கனி அரசுகள்’ என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எட்டாம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது இரண்டாம் இடத்தை எட்டிப் பிடித்தது குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு. #தாங்குமா தமிழகம்
கமலஹாசனின் இந்த கிண்டலுடன் கூடிய டுவீட்டுக்கு பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) May 14, 2020
கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது.
காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு. #தாங்குமாதமிழகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments