விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு: கமல்ஹாசன் டுவீட்
- IndiaGlitz, [Tuesday,February 23 2021]
44 ஆண்டுகளாக கலாச்சார நிகழ்வு நடைபெற்று வரும் தமிழின் மாபெரும் அறிவியக்கத்தின் விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிக்க வாருங்கள் என கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்பதும் இந்த புத்தக கண்காட்சியை காண ஆயிரக்கணக்கானோர் தினமும் வருகை தருவார்கள் என்றும் தெரிந்ததெ. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள 44வது புத்தகக் கண்காட்சி வரும் 24ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மொத்தம் 14 நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தக கண்காட்சியில் ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து வரும் கமல்ஹாசன் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை புத்தகக் காட்சி பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது. 44 ஆண்டுகளாக நடக்கும் கலாச்சார நிகழ்வு. தமிழின் மாபெரும் அறிவியக்கத்தின் விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு இது. பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் அறிவமுதம் பருக வருக.
மேலும் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிமுகம் செய்த புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்படும் என பபாசி அறிவித்திருந்தது தெரிந்ததே.
சென்னை புத்தகக் காட்சி பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது. 44 ஆண்டுகளாக நடக்கும் கலாச்சார நிகழ்வு. தமிழின் மாபெரும் அறிவியக்கத்தின் விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு இது. பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் அறிவமுதம் பருக வருக.
— Kamal Haasan (@ikamalhaasan) February 23, 2021