தேய்த்தாலும் தேயாது தெற்கு: சென்னைக்கு கிடைத்த யுனெஸ்கோ அங்கீகாரம் குறித்து கமல்
- IndiaGlitz, [Thursday,November 09 2017]
சென்னை நகரம் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகாரம் செய்யப்பட்ட செய்தியையும் அதற்கு பாரத பிரதமர் சென்னை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததையும் நேற்று பார்த்தோம். இந்த நிலையில் சென்னைக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம் குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்
அவர் தனது டுவிட்டரில், 'சென்னை மார்கழி இசை விழாக்களுக்குக் கிடைத்த யுனெஸ்கோ அங்கீகாரம் தகுதிக்கும், ரசனைக்கும் கிடைத்தது. தமிழர் பெருமையை பிறர் பாடக் கேட்பதில்தான் சுகமும், பெருமையும். இந்தியப்பிரதமர் சென்னையைப் பாராட்டுதல், தமிழுக்கே பெருமை. தேய்த்தாலும் தேயாது தெற்கு' என்று கூறியுள்ளார்.
யுனேஸ்கோ அமைப்பு சென்னை, ஜெய்ப்பூர், வாரணாசி ஆகிய இந்திய நகரங்கள் உள்பட உலகின் 64 நகரங்களை கிரியேட்டிவ் சிட்டிஸ் பட்டியலில் இணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.