இது இயலாமை அல்ல; இழிவான அரசியல்: மத்திய அரசை போட்டுத்தாக்கும் கமல்

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை அமைப்பதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு சுணக்கம் காட்டி வருவது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் கொடுத்த கெடு இன்னும் ஒரு  வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் மத்திய அரசு இன்னும் அதற்கான முயற்சியை எடுக்கவில்லை

இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் காட்டமாக மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார். அவர் அதில் குறிப்பிட்டிருப்பதாவது:

பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா ? இது இயலாமை அல்ல ; இழிவான அரசியல் . கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம் .

More News

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் திருமண நாள் கொண்டாட்டம்

இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது திருமண நாளை நேற்று உறவினர்களுடன் சிறப்பாக கொண்டாடினார்.

அடுத்த படம் குறித்து ராஜமெளலியின் அதிகாரபூர்வ அறிவிப்பு

ராஜமெளலியின் அடுத்த படத்தின் அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்த நிலையில் தற்போது ஒரு சிறு வீடியோ மூலம் தனது அடுத்த படம் குறித்த தகவல்களை ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

சக நடிகர்களுக்கு ஜாக்கிசான் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு

ஜாக்கிசான் நடித்த 'குங்பூ யோகா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தில் பணிபுரிந்த முக்கிய நடிகர்களுக்கும் மேலும் தனக்கு நெருக்கமானவர்களுக்கும் ஜாக்கி சான் பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார்.

சிவகார்த்திகேயன் படத்திற்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் நடிகைகள்

ரஜினியின் 'கபாலி' படத்தில் இடம்பெற்ற 'நெருப்புடா' பாடல் மூலம் பெரும்புகழ் பெற்ற அருண்காமராஜ், முதன்முதலில் இயக்கும் படம் ஒன்றை சிவகார்த்திகேயன் தயாரிக்கின்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

நான் வந்துட்டேன்னு சொல்லு: தமிழில் டுவீட் போட்ட பிரபல சிஎஸ்கே வீரர்

இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட வந்துவிட்டால், தமிழ் ரசிகர்களின் பாசமழைக்கு பஞ்சமே இருக்காது என்பது தெரிந்ததே. இதற்கு நல்ல உதாரணம் தல தோனி