அரசாள்பவர் கேட்டால்தானே! பஸ் கட்டண உயர்வு குறித்து கமல்
- IndiaGlitz, [Wednesday,January 24 2018]
நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி தனிக்கட்சி தொடங்கி தீவிர அரசியலில் குதிக்கவுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் இதுகுறித்து தனது ரசிகர்களிடம் ஆலோசனை செய்து வருகிறார்
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு உயர்த்திய பேருந்து கட்டண உயர்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருவதோடு போராட்ட தேதியையும் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் பஸ் கட்டணத்தை உயர்த்தாமலேயே போக்குவரத்து துறைக்கு நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் இருப்பதாகவும், ஆனால் அரசாள்பவர்கள் இதுகுறித்து கலந்தாலோசிப்பது இல்லை என்றும் தனது வருத்தத்தை கமல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே! என்று கூறியுள்ளார்