புதியஅரசியல் சமைப்போம்: பாரதியாரின் நினைவு நாளில் கமல் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் மகாகவி பாரதியாரின் மீது தீவிர பற்று உள்ளவர் என்பதும் அவருடைய பாடல்கள் மற்றும் கருத்துக்களை தனது படங்களில் ஆங்காங்கே பயன்படுத்தியவர் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக கமல்ஹாசன் நடித்த ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில் பாரதியின் பாடல்களும், அவருடைய புரட்சி கருத்துக்களுடன் கூடிய வசனங்களும் இடம்பெற்றிருந்தன என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதை அடுத்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் இந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது: சாவிலாக்கவி. நம் தமிழுடனும், வாழ்வுடனும் நீக்கமறக்கலந்து விட்ட முண்டாசுக்காரரின் பெருங்கனவை நனவாக்குவோம். அரசியலில் இளையோரானாலும், தழல் வீரத்தில் குஞ்சென்றும், மூப்பென்றும் இல்லை என்ற திரு.சுப்ரமணியபாரதியின் அக்கினிக்குஞ்சுகளாய் மாறி புதிய அரசியல் சமைப்போம். வான்புகழ் தமிழகம் காண்போம்’என்று குறிப்பிட்டுள்ளார்
மகாகவி பாரதியார் குறித்த கமலஹாசனின் இந்த டுவீட் தற்போது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது
சாவிலாக்கவி.நம் தமிழுடனும்,வாழ்வுடனும் நீக்கமறக்கலந்து விட்ட முண்டாசுக்காரரின் பெருங்கனவை நனவாக்குவோம்.அரசியலில் இளையோரானாலும்,தழல் வீரத்தில் குஞ்சென்றும்,மூப்பென்றும் இல்லை என்ற திரு.சுப்ரமணியபாரதியின் அக்கினிக்குஞ்சுகளாய் மாறி புதியஅரசியல் சமைப்போம்.வான்புகழ் தமிழகம் காண்போம்
— Kamal Haasan (@ikamalhaasan) September 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments