பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? பாபர் மசூதி தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 1992ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் துணை பிரதமர் எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட பல பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இன்று காலை இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே விடுதலை செய்யப்படுவதாக இந்த தீர்ப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இந்த தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது: நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது.
நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும்
— Kamal Haasan (@ikamalhaasan) September 30, 2020
அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout