close
Choose your channels

முரட்டு உருவம், மழலை உள்ளம்: அம்பரீஷூக்கு கமல் இரங்கல்

Sunday, November 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் நேற்று உடல்நலக்கோளாறு காரணமாக காலமானதை அடுத்து கன்னட திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

அம்பரீஷின் மறைவிற்கு அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவராகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே இரங்கல் தெரிவித்தது மட்டுமின்றி அவருடைய இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவும் பெங்களூர் விரைந்துள்ளார். இந்த நிலையில் அம்பரீஷின் இன்னொரு நண்பரான நடிகர் கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

42 வருடங்களாக என் நண்பர் திரு.அம்பரீஷ். முரட்டு உருவம், மழலை உள்ளம். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும், என்னைப் போன்ற நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment