இது யாருடைய இந்தியா? கமல்ஹாசன் ஆவேச கேள்வி!
- IndiaGlitz, [Friday,October 01 2021]
பிரபல இந்திய தொழிலதிபர் அதானியின் வருமானம் ஒருநாள் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் என்று செய்தி வெளியாகி இருக்கும் நிலையில் இதுகுறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் இது யாருடைய இந்தியா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய தொழில் அதிபர்களில் ஒருவரான அதானியின் தினசரி வருமானம் ஆயிரம் கோடி என்றும், அவருடைய சொத்து மதிப்பு மொத்தம் 5.05 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றும், இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அம்பானிக்கு அடுத்த இடத்தை அதானி பிடித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடி என்ற தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ள நிலையில் கமல்ஹாசன் இதுகுறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது. 32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா?
தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது.32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள்.பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா?
— Kamal Haasan (@ikamalhaasan) October 1, 2021