இளவயது மரணங்களின் வேதனை பெரிது.. டேனியல் பாலாஜி குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய கமல்..!

  • IndiaGlitz, [Saturday,March 30 2024]

நடிகர் டேனியல் பாலாஜி நேற்று இரவு திடீரென மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் அவரது குடும்பத்திற்கு உலகநாயகன் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .

நடிகர் டேனியல் பாலாஜி நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதனை அடுத்து அவரது உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் தமிழ் திரை உலகினர் பலர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய உடல் இன்று தகனம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் டேனியல் பாலாஜி மறைவுக்கு பல திரை உலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது.

இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி.

கமல்ஹாசனின் ’வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில் முக்கிய வில்லனாக டேனியல் பாலாஜி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.