என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்: கமல்ஹாசன் புகழாரம்
- IndiaGlitz, [Thursday,October 15 2020]
உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவு பெற்று தற்போது மூன்றாவது ஆண்டு நடைபெற்று வருகிறது. மேலும் அவர் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை சந்தித்து விட்டார் என்பதும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அவரும் அவரது கட்சியின் வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் நான் அரசியலுக்கு வந்தது இவருடைய பேச்சை கவர்ந்து தான் என்று முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்களை கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்
இன்று அப்துல் கலாம் பிறந்த நாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதை அடுத்து அவருக்கு பிறந்தநாள் கூறும் வகையில் கமல்ஹாசன் பதிவு செய்த ட்வீட்டில் கூறியிருப்பதாவது: என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்; அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான திரு.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி.
முன்னதாக கமலஹாசன் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாக ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்திற்கு சென்று அவருடைய குடும்பத்தினரிடம் ஆசி பெற்ற பின்னரே கட்சி பணியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்; அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான திரு.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி.
— Kamal Haasan (@ikamalhaasan) October 15, 2020