அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்: கமல்ஹாசன்

கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே தற்போது பெரும் போராட்டம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு நாட்டு அரசும் கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பது எப்படி என்று புரியாமல் தவித்து வருகிறது. இப்போதைக்கு மனித இனத்திற்கு இருக்கும் ஒரே வழி வீட்டில் முடங்கிக் கிடப்பது மட்டுமே

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வீட்டில் முடங்கி கிடப்பதை தவிர வேறு வழியில்லை என்பதால் இந்த ஒரே வழியை அனைத்து அரசுகளும் கடைபிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோல் இந்தியாவில் இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு என பிரதமர் நேற்று அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸிலிருந்து மக்களை காக்க இந்த ஒரு வழியைத் தவிர வேறு வழி இல்லை என்றும் பொருளாதாரம் எவ்வளவு சீரழிந்தாலும் தனக்கு கவலை இல்லை என்றும் மக்களின் உயிர் தான் தனக்கு முக்கியம் என்றும் அதனால் அனைத்து இந்திய மக்களும் 21 நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருந்து ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார்

இந்த நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பற்றி கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்

கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் கமெட்டில் பதிவாகி வருகிறது

More News

சென்னையைச் சேர்ந்த மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல் 

தமிழகத்தில் ஏற்கனவே 15 பேர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

கொரோனா; அடுத்த 3 மாதங்களுக்கு ATMகளில் சேவைக்கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்!!!

கொரோனா பரவலைத் தடுக்க அடுத்த 21 நாளுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அமல்படுத்தி உத்தரவிட்டார்.

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முதல் பலி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரம் மோசமானாலும் பரவாயில்லை, எனக்கு மக்கள் தான் முக்கியம்: பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதரம் மிக மோசமாக பாதிப்பு அடைந்தாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு என் நாட்டு மக்களின் உயிர்தான் முக்கியம் என்று பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்குடன் பேசியுள்ளது

கொரோனா வைரஸ் எதிரொலி: ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு

உலகமெங்கும் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி அடுத்த ஆண்டு நடத்த