20 லட்சம் கோடியில் தமிழ்நாட்டுக்கு எத்தனை கோடி? கமல்ஹாசன் கேள்வி
- IndiaGlitz, [Sunday,May 17 2020]
பாரத பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது, கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக 20 லட்சம் கோடியில் திட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதனையடுத்து 20 லட்சம் கோடி குறித்த திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஐந்து நாட்களாக அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து அடிக்கடி விமர்சனம் செய்து வரும் உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இதுகுறித்து கூறுகையில் மத்திய அரசு அறிவித்த 20 லட்சம் கோடியில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எத்தனை கோடி? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு.
கமல்ஹாசனின் இந்த டுவீட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?
— Kamal Haasan (@ikamalhaasan) May 17, 2020
மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்.
ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு.