ஹெலிகாப்டரில் தாழப்பறந்தாலும் இவை தெரியாது: முதல்வரை குத்திக்காட்டிய கமல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சிதறடித்து கடும் சேதங்களை உண்டாக்கிய நிலையில் நேற்றுமுன் தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஹெலிகாப்டரில் சென்று சேதங்களை பார்வையிட்டனர். சாலையில் சென்று மக்களை சந்திக்காமல் ஹெலிகாப்டரில் முதல்வரும், துணை முதல்வரும் சென்றதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
இந்த நிலையில் இன்று கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட நடிகர் கமல்ஹாசன், அந்த பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, நிவாரண உதவி பொருட்களையும் அளித்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டதாவது: தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்... புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அம்மையப்பன், அம்மாபேட்டை, கோட்டூர் மக்கள், கோபத்தில் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொழுது உணவுப்பொருட்கள் கொண்டு சென்ற எங்களிடம், எங்களுக்கு உணவு இருக்கிறது, மின்சாரம்தான் இல்லை என்று பெருந்தன்மையாக வழிவிட்டது தமிழனாக என்னை பெருமைப்பட வைத்தது. இவர்களா ஏழைகள்? பெருந்தன்மைச் செல்வந்தர்கள் என்று கூறியுள்ளார்.
வழக்கம்போல் கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்களுக்கு பெரும்பாலான பாராட்டுக்களும் ஒருசில விமர்சனங்களும் கமெண்ட்டுகளாக பதிவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout