'என்னங்க இப்படி பண்ணிட்டிங்க'.. மாயாவை செம்மையாக கலாய்த்த கமல்ஹாசன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரோமோ வீடியோவில் பிரதீப் அந்தோணி சேவ் செய்யப்பட்டார் என்று கமல்ஹாசன் கூறியவுடன் பொதுமக்கள் கைதட்டினர். உடனே ’என்னங்க இப்படி செஞ்சிட்டீங்க’ என்று மாயாவை பார்த்து கமல்ஹாசன் கலாய்த்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதலே விறுவிறுப்பாகி வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ‘இந்த வாரம் மட்டும் பிரதீப் அந்தோணி சேவ் என்று கமல் சார் சொல்லி, அதுக்கு பொதுமக்கள் கைதட்டினால் அப்ப இருக்கு என்று மாயா சவால் விட்டிருந்தார்.
இந்த நிலையில் பிரதீப் அந்தோணி சேவ் என்று கமல்ஹாசன் கூறிய போது பார்வையாளர்கள் கைதட்டினர். அப்போது கமல்ஹாசன் ’என்னங்க இப்படி செஞ்சிட்டீங்க, பிரதீப்புக்கு மட்டும் ஜனங்கள் கைதட்டினா என்று மாயா ஒரு சபதம் போட்டாங்க, யாருக்காவது ஞாபகம் இருக்குதா, அப்புறம் எப்படிங்க நீங்க கைதட்டலாம்’ என்று கூற மாயாவும் ‘ஆமாம் சார்’ என்று அசடு வழிய, மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்பது இந்த புரோமோ வீடியோக்களில் இருந்து தெரிய வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout