அம்பு ஜனனி என்றால் வில்லாளர் யார்? ஜனனியை கலாயத்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் நடந்த நிலையில் இந்த டாஸ்க்கில் ஒரு சிலர் மட்டுமே சரியாக விளையாடியதாகவும், பலர் சொந்த விருப்பு சொந்த விருப்பு வெறுப்புடன் விளையாடிய தாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

குறிப்பாக அசீம் கிட்டத்தட்ட அனைவரின் வெறுப்பை சம்பாதித்து கொண்ட நிலையில் ஒரு சிலர் தன்னுடைய சொந்த புத்தியில் விளையாடாமல் சிலருடைய கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு விளையாடிய தாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கமல்ஹாசன் இன்றைய அடுத்த புரமோ வீடியோவில், ‘யார் வில்லாளர்? யார் எய்யப்பட்ட அம்பு? என்று கேள்வி கேட்க அதற்கு ஷிவின், ‘அமுதவாணன் வில்லாளர் என்றும் ஜனனி அம்பு என்றும் கூறுகிறார். அதேபோல் அதேபோல் ரக்ஷிதா கூறியபோது அமுதவாணன் சொல்வதை தான் ஜனனி நிறைவேற்றுவது போல் தெரிந்தது என்று கூறினார். அமுதவாணன் கட்டுப்பாட்டில் ஜனனி இருப்பதுபோல் தெரிகிறது என ஏடிகே கூறினார். விக்ரமனும் இதே கருத்தை தெரிவித்தார்.

இதனையடுத்து ஜனனி, ‘வில்லாளர் விக்கிரமன் என்றும், அவர் கூறுவதை தான் ஏடிகே செய்வதாக தனக்கு தோன்றுகிறது; என்று கூறுகிறார். இதனை அடுத்து ஜனனியிடம் கமல்ஹாசன், ‘நிறைய அம்பு நீங்கள் வாங்கியுள்ளீர்கள், உங்களுக்கு தெரியுமே யார் வில்லாளர்? யார் அம்பு என்று கலாய்த்ததை அடுத்து பார்வையாளர்கள் உள்பட அனைவரும் சிரிக்கும் காட்சியுடன் இன்றைய அடுத்த புரமோ முடிவுக்கு வருகிறது.