close
Choose your channels

பிக்பாஸை கூப்பிட்டு கேப்டனை கலாய்த்த கமல்ஹாசன்.. செம கலகலப்பு..!

Sunday, October 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த வார கேப்டன் ஆக இருந்த சரவணனை, பிக்பாஸை அழைத்து அவருக்கு முன்பே கமல்ஹாசன் கலாய்த்த வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வார கேப்டன் ஆக இருந்த சரவணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. குறிப்பாக எந்த ஒரு முடிவையும் அவர் சொந்தமாக எடுக்காமல், உடனடியாக பிக் பாஸ் இடம் சென்று இந்த இந்த மாதிரி பிரச்சனை இருக்கிறது, இதற்கு என்ன தீர்வு என்று கேட்பார். குறிப்பாக அடுத்த வார கேப்டன் டாஸ்க்கில் நேற்று யுகேந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மாயா அந்த வெற்றியில் ஒரு சந்தேகத்தை கிளப்பினார்.

உடனே அவர் பிக் பாஸ் இடம் சென்று இந்த மாதிரி மாயா ஒரு சந்தேகத்தை கிளப்பி உள்ளார், இதற்கு ஒரு தீர்வு கொடுங்கள் என்று பிக் பாஸ் இடம் கேப்டன் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் கேப்டனின் செயல்பாடு குறித்து பேசியபோது பிக் பாஸ் நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்க போகிறேன், நீங்கள் தயாராக இருங்கள், அவர் உங்களிடம் கேட்டு தான் எனக்கு அந்த பதில் சொல்லுவார்’ என்று கேப்டனை பிக் பாஸ் முன்னிலையில் கலாய்த்தார்.

அதற்கு பிக் பாஸ் ’இந்த வாரம் என்னிடம் அதிக கேள்விகளுக்கு கேட்கப்பட்டது, நீங்களுமா? என கூறியது செம கலகலப்பாக இருந்தது. ப்ரோமோ வீடியோவே இப்படி இருக்கும்போது, நிகழ்ச்சியில் கமல்ஹாசன் என்ன செய்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment