என் பட்டத்தை நீங்க எடுத்துட்டீங்களே: அர்ச்சனாவை அர்ச்சனை செய்த கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்து அனைத்து போட்டியாளர்களுக்கும் பட்டங்களை கொடுத்தார் என்பது தெரிந்ததே. அந்த படத்தை கொடுக்கும்போது இந்த பட்டம் மக்கள் நீங்கள் இந்த பத்து நாட்களாக வீட்டில் இருந்ததை பார்த்து கொடுத்த பட்டம் என்றும் மக்களின் பிரதிநிதியாக நான் இந்த பட்டத்தை அளிக்கிறேன் என்று கூறினார்

இதற்கு இன்று கமல்ஹாசன் பதிலளிக்கும் போது ’மக்களின் பிரதிநிதியாக நான் மூன்று வருடமாக இருக்கிறேன் என்று மக்களிடம் கூறி வருகிறேன். அவர்களும் நம்பி விட்டார்கள். ஆனால் நீங்கள் அந்த பட்டத்தை எடுத்து கொண்டது எனக்கு ஒரு சின்ன மன வருத்தம் இருக்கிறது என்று கூறி அர்ச்சனாவை மறைமுகமாக அவர் அர்ச்சனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் எல்லோருடைய முகமூடியும் எப்போது கிழிய போகிறது என்ற ஆர்வத்தில் இருப்பார்கள் என்று சுரேஷை பார்த்து கூறிய கமலஹாசன், வேல்முருகனை பார்த்து ’ஆனால் வேஷ்டி அப்படி அல்ல, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்’ என்று காமெடியாக கூறியுள்ளார்