'தூங்காவனம்' டிரைலர் ரிலீஸ் தேதி. கவுதமி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,September 03 2015]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் இந்த படம் ரிலீஸுக்கு தயாராகிவிடும் என கூறப்படுகிறது.


இந்நிலையில் 'தூங்காவனம்' படத்தின் டிரைலர் வெகுவிரைவில் ரிலீஸாகும் என கடந்த இரண்டு நாட்களாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கவுதமி இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'தூங்காவனம்' படத்தின் டிரைலர் தேதி குறித்த ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளார்.

'தூங்காவனம்' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகும் புதிய போஸ்டரில் அறிவிக்கப்படும் என்று கவுதமி சற்று முன்னர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உலக நாயகனின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத், ஆஷா சரத், உமா ரியாஸ்கான், யூகிசேது, மதுஷாலினி உள்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

அஜீத் 56 படத்தின் மாஸ் டைட்டில்?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' என்று அழைக்கப்படும் திரைப்படத்திற்கு இன்னும்...

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் கவுண்டமணி?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சிவகார்த்திகேயன், பிரபல காமெடி நடிகர் கவுண்டமணியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது...

சுந்தர் சியின் அரண்மனையை கைப்பற்றிய ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்?

மறைந்த பிரபல இயக்குனர் இராம.நாராயணன் ஆரம்பித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்தும்...

விஜய்-அஜீத்-பவன்கல்யாண். சுசீந்திரனின் அடுத்த ஹீரோ யார்?

விஷால்-காஜல் அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'பாயும் புலி

ஹாலந்து செல்கிறது சூர்யா படக்குழு

'மாஸ்' படத்திற்கு பின்னர் சூர்யா, வித்தியாசமான மூன்று வேடங்களில் நடித்து வரும் '24' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது....