close
Choose your channels

உலக நாயகனை ஒரே ஒரு நாளில் முந்திய தல அஜீத்?

Monday, September 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் தீபாவளி தினத்தில் அஜீத்தின் 'தல 56' மற்றும் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' ஆகிய இரு படங்களும் ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும் இரு படங்களும் ரிலீஸ் ஆகும் சரியான தேதிகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த இரு படங்களில் ரிலீஸ் தேதிகள் குறித்து ஒருசில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது

தீபாவளி நவம்பர் 10ஆம் தேதி வருவதாக இருந்தாலும் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' திரைப்படம் அவருடைய பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நவம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமையாக இருப்பதால் தற்போது வெளிவந்த புதிய தகவலின்படி இந்த படம் நவம்பர் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என கூறப்படுகிறது.

இதேபோல் தல 56' படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்கள் சாய்பாபா பக்தர் என்பதால் அவருடைய வியாழக்கிழமை செண்டிமெண்ட் பட ரிலீஸிலும் தொடர்கிறது. தீபாவளிக்கு முந்தைய வியாழக்கிழமையான நவம்பர் 5ஆம் தேதி 'தல 56' வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே உலகநாயகனின் படத்தை விட ஒரே ஒருநாள் 'தல 56' ரிலீஸ் முந்தி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment