கமல்ஹாசனின் 'தூங்காவனம்' ரிலீஸ் தேதி?

  • IndiaGlitz, [Thursday,October 15 2015]

வரும் தீபாவளி தினத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' மற்றும் தல அஜீத் நடித்த 'வேதாளம்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அஜீத்தின் வேதாளம்' திரைப்படம் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஏம்.ரத்னம் அவர்களின் வியாழக்கிழமை செண்டிமெண்ட் காரணமாக தீபாவளிக்கு முந்தைய வியாழக்கிழமையான நவம்பர் 5ஆம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது.

இதே போல தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்பு அதாவது நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள் வருவதால், அன்றைய தினம் 'தூங்காவனம்' படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'தூங்காவனம், 'வேதாளம்' படங்களுடன் வேறு சில படங்களும் தீபாவளி தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், தீபாவளிக்கு இன்னும் 25 நாட்கள் இருப்பதால் விரைவில் வேறு படங்களின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'வேதாளம்' படத்தில் அஜீத்தின் கேரக்டர் பெயர்

அஜீத் நடித்து முடித்துள்ள 'வேதாளம்' படத்தின் கதை கிட்டத்தட்ட பாட்ஷா பாணியில் இருப்பதாக கூறப்படுகிறது...

மீண்டும் முதல் காதலுக்கு திரும்பிய த்ரிஷா

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் நடிகை த்ரிஷா சமீபத்தில் பிரபல தொழிலதிபர் வருண் மணியன்...

அஜீத்தின் முதலாளி ஆகிறார் சூரி?

அஜீத் நடித்துள்ள 'வேதாளம்' படத்தில் அஜீத் டாக்சி டிரைவராக நடித்து வருவதாக செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில்...

எம்.எல்.ஏ ஆகிறார் 'மெட்ராஸ்' நடிகை

சூப்பர்ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தை இயக்கி வரும் பா.ரஞ்சித் இயக்கிய 'மெட்ராஸ்' படத்தின் நாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்த நடிகை கேதரின் தெரசா...

பிரியதர்ஷன் படத்தின் இசையமைப்பாளர் யார்? புதிய தகவல்

கோபுர வாசலிலே', காஞ்சிவரம்' போன்ற தமிழ் படங்களையும் ஏராளமான இந்தி மற்றும் மலையாள படங்களையும் இயக்கிய இயக்குனர் பிரியதர்ஷன்...