அந்த குடும்பத்தில் நானும் ஒரு அங்கம்: மம்தாவுக்கு நன்றி கூறிய கமல்

  • IndiaGlitz, [Saturday,November 11 2017]

கொல்கத்தாவில் நடைபெறும் 23வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள நேற்று உலக நாயகன் கமல்ஹாசன் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்றார். அங்கு அவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார்

மம்தா பானர்ஜியுடனான சந்திப்பு குறித்து கமல் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'என்னை அழைத்ததற்கும், சிறந்த சினிமா கலைஞர்களை பெருமைப்படுத்தியதற்கும் நன்றிகள். நானும், அந்தக் குடும்பத்தில் அங்கமாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். ஒற்றுமைக்கும், பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறீர்கள்' என்று பதிவு செய்துள்ளார்.

இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை என்று கமல் விளக்கமளித்தாலும் மேற்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், வடக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெரிவால் ஆகியோர்களை சந்தித்த சந்தித்த கமல், நேற்று கிழக்கில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளதாகவும், இதன் மூலம் கமல் தேசிய அரசியலை குறிவைப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

More News

அறம்' படத்தை இதற்காகத்தான் பார்த்தேன்: தொல்.திருமாவளவன் பேட்டி

அறம்' என்ற தலைப்பையும் இயக்குநர் கோபியையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அதற்காகவே இந்த படத்தை பார்க்க வந்ததாக கூறிய திருமாவளவன் படம் குறித்து கூறியதாவது:

நயன்தாராவின் 'அறம்' படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் வாழ்த்து

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் நேற்று வெளியாகி சமூக இணணயதளங்கள், விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் என முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

நயன்தாராவுக்கு 100க்கு 100 மார்க்: விக்னேஷ்சிவன் ஆச்சரியம்

நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருவதால் நயன்தாரா, இயக்குனர் கோபிநயினார் உள்பட படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

விக்ரம் மகன் துருவ் படத்தின் டைட்டில் அறிவிப்பு

சீயான் விக்ரம் மகன் துருவ், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'அர்ஜூன்ரெட்டி' படத்தின் ரீமேக்கில் அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

வீடுதேடி வரும் வங்கி சேவை: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

வங்கிகளில் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல் காசோலைகள் மற்றும் டிடி ஆகியவற்றுக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையில் இவ்வித சேவைகளுக்காக வங்கி அதிகாரிகள் இனி வீடுதேடி வருவார்கள்