ஒரே நாளில் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்.. நன்றி சொன்ன கமல்ஹாசன்..!
- IndiaGlitz, [Thursday,September 26 2024]
ஒரே நாளில் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு, உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
மறைந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் வாழ்ந்த நுங்கம்பாக்கம், காம்தார் நகர் பிரதான சாலைக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று எஸ்.பி.பி சரண் நேற்று முன்தினம் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இது குறித்து முதல்வர் அலுவலகத்திற்கு மனு ஒன்றை அனுப்பி இருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், எஸ்.பி.பி சரண் அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், அவரது விருப்பப்படி அந்த சாலைக்கு எஸ்பிபி. பெயர் வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு ஏற்கனவே எஸ்.பி.பி சரண் முதல்வருக்கு நன்றி தெரிவித்திருந்த நிலையில், தற்போது உலகநாயகன் கமல்ஹாசனும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான #SPBalasubrahmanyam அவர்களின் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்குச் சூட்டி அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள்.
லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்கு செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது.
பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உரித்தாகட்டும்
ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான #SPBalasubrahmanyam அவர்களின் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்குச் சூட்டி அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 26, 2024
லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச்…