தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டுக்கு கமல்ஹாசன் கூறிய நன்றி
- IndiaGlitz, [Thursday,April 19 2018]
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மட்டும் இந்த சட்டம் இல்லை.
இதுகுறித்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும் என்றும், லோக் ஆயுக்தா அமைக்கப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு கூறிய காரணங்கள் ஏற்புடையது அல்ல என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: உச்ச நீதிமன்றத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி. இந்த அரசு, உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும் . லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து' என்று கூறியுள்ளார்.