அமித்ஜிக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,June 12 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 'விஸ்வரூபம் 2' என கூகுளில் 66 நாடுகளில் மக்கள் தேடியுள்ளனர் என்பது இதுவொரு தமிழ்ப்படம் அல்ல, உலக படம் என்பதை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமித் சாத் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலரை பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். நடிப்பு என்றால் என்ன? என்பதை உங்கள் படத்தை பார்த்துதான் நான் தெரிந்து கொண்டேன். 'விஸ்வரூபம் 2' டிரைலர் அபாரமாக உள்ளது. விரைவில் முழு படத்தையும் திரையில் பார்க்க ஆவலுடன் உள்ளேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

இந்த டுவீட்டுக்கு கமல்ஹாசன் 'நன்றி அமித்ஜி' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து அதில் 'சாத் என்பதை அடைப்புக்குறியில் குறிப்பிட்டுள்ளார். அமித்ஜிக்கு பக்கத்தில் உள்ள அடைப்புக்குறியை கமல்ஹாசன் ஏன் பதிவு செய்தார் என்பது அனைவருக்கும் புரிந்ததே. ஒருவேளை புரியாதவர்கள் புரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.