அல்வாவில் தொடங்கி அல்வாவில் முடிந்த பட்ஜெட்: கமல் கருத்து
- IndiaGlitz, [Saturday,February 01 2020]
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஏறக்குறைய மூன்று மணி நேரம் அவர் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை பல்வேறு அரசியல் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
குறிப்பாக நடுத்தர மக்களுக்கு வருமான வரிச்சலுகை 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்து இருப்பதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் எல்ஐசி நிறுவனத்தை தனியார் நிறுவனங்களுக்கு விற்பது உள்ளிட்ட ஒருசிலவற்றை குறிப்பிட்டு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த நடிகரும் மக்கள் நீதிக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் கூறியதாவது: அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது.
நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை.
முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது போலவே இந்த ஆண்டும் பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக அல்வா கிண்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் அல்வா தயார் செய்து பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கினார். இதனையே கமல்ஹாசன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது
அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது.
— Kamal Haasan (@ikamalhaasan) February 1, 2020
நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை.