மத்திய பட்ஜெட் குறித்து கமல்ஹாசனின் காட்டமான விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன், உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வரும் 10ஆம் தேதி உரையாற்றவுள்ளார். இதற்காக அவர் நேற்று விமான நிலையம் வந்தபோது செய்தியாளர்களை சந்தித்து நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்
கிராமப்புறங்களுக்கு மத்திய அரசின் பார்வை திரும்பியுள்ளதாகவும், மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது ஆறுதலாக உள்ளதாகவும் கூறிய கமல், அதே நேரத்தில் இந்த பட்ஜெட் நடுத்தர வர்த்தகத்தைப் பாராமுகமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். மத்திய பட்ஜெட்டில் தமிழகம் பல ஆண்டுகளாகவே புறக்கணிக்கப்படுவது ஒரு சோகம் என்றும் இருப்பினும் பட்ஜெட் குறித்து அறிஞர்களுடன் ஆலோசித்த பின்னரே தனது கருத்தை தெளிவாக கூற முடியும் என்றும் கூறினார்.
மேலும் தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தின் நாட்களுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்வது முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments