மத்திய பட்ஜெட் குறித்து கமல்ஹாசனின் காட்டமான விமர்சனம்

  • IndiaGlitz, [Friday,February 02 2018]

உலக நாயகன் கமல்ஹாசன், உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வரும் 10ஆம் தேதி உரையாற்றவுள்ளார். இதற்காக அவர் நேற்று விமான நிலையம் வந்தபோது செய்தியாளர்களை சந்தித்து நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்

கிராமப்புறங்களுக்கு மத்திய அரசின் பார்வை திரும்பியுள்ளதாகவும், மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது ஆறுதலாக உள்ளதாகவும் கூறிய கமல், அதே நேரத்தில் இந்த பட்ஜெட் நடுத்தர வர்த்தகத்தைப் பாராமுகமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். மத்திய  பட்ஜெட்டில் தமிழகம் பல ஆண்டுகளாகவே புறக்கணிக்கப்படுவது ஒரு சோகம் என்றும் இருப்பினும் பட்ஜெட் குறித்து அறிஞர்களுடன் ஆலோசித்த பின்னரே தனது கருத்தை தெளிவாக கூற முடியும் என்றும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தின் நாட்களுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்வது முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
 

More News

ஐசியூவில் இருந்து நார்மல் வார்டுக்கு கொண்டு வந்துள்ளோம்: பட்ஜெட் குறித்து தமிழிசை

தமிழிசை செளந்திரராஜன்: இந்த பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருக்கும் நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம்.விரைவில் அதை நடக்க வைப்போம்

வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை! இருப்பினும் ஒரு சிறு ஆறுதல் என்ன தெரியுமா?

இன்றைய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது ஒரு ஏமாற்றமே.

அமலாபாலை சந்தித்தது ஏன்? கைதான தொழிலதிபர் வாக்குமூலம்

பிரபல நடிகை அமலாபால் நேற்று தன்னை தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாக பேசியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அழகேசன் என்ற 40வயது தொழிலதிபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

தனிநபர் வருமான வரி, ஜனாதிபதி சம்பள உயர்வு: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் இன்று காலை பாராளுமன்றத்தில் இந்த ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் ஒருசில முக்கிய அம்சங்களை ஏற்கனவே பார்த்தோம்.

பள்ளிகளில் டிஜிட்டல் போர்டுகள், கிசான் கிரெடி கார்டு வசதி: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் 2018-2019க்கான பட்ஜெட்டை தற்போது வாசித்து வருகிறார்.