தம்பி சூர்யாவுக்கு ஆதரவு கொடுத்த அண்ணன் கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய கல்விக்கொள்கை குறித்த பேசியது கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ஹெச்.ராஜா மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்பட ஒருசிலர் விமர்சனம் செய்தனர். அதேபோல் சீமான், நாஞ்சில் சம்பத் உள்பட ஒருசிலர் ஆதரவு கருத்துக்களையும் தெரிவித்தனர். இந்த பிரச்சனையை மேலும் பெரிதாக்க விரும்பாத சூர்ய, தன்மீதான விமர்சனத்திற்கு கூட பதில் அளிக்கவில்லை.
இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:
ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ/ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றை எனக்கும் உடன்பாடு உண்டு.
மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்க போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கின்றது. தம்பி சூர்யாவுக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு.
இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அன்புத் தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு. pic.twitter.com/8chbBdQ3hM
— Kamal Haasan (@ikamalhaasan) July 16, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments