தனலட்சுமியிடம் இருந்து பறிக்கப்பட்ட வெற்றி: கமல் எடுத்த அதிரடி முடிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த டாஸ்க் கார சாரமாக இருந்தது என்பதும் தனலட்சுமி தலைமையிலான அணியும் விக்ரமன் தலைமையிலான அணியும் பரபரப்பாக மோதிக் கொண்டது என்பதும் தெரிந்ததே.

இந்த இரண்டு அணிகளும் விளையாடிய ஸ்வீட் கடை டாஸ்க்கில் வெற்றி பெற்றது யார் என்ற அறிவிப்பை பிக்பாஸ் வெளியிட்ட போது தனலட்சுமி டீம் மகிழ்ச்சி அடைந்தது.

இந்த நிலையில் கமல்ஹாசன் இன்று அதிரடி முடிவு எடுத்து தனலட்சுமியின் வெற்றியை பறித்துக்கொண்டார். பிக்பாஸ் சொன்ன ரூல்ஸை நீங்கள் மீறிவிட்டீர்கள் என்றும் அதனால் உங்கள் வெற்றி பறிக்கப்படுகிறது என்றும் அது மட்டுமின்றி நாமினேஷன் பட்டியலில் உங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதும் திரும்பப் பெறப்படுகிறது என்றும் கமலஹாசன் தெரிவித்தார்.

மேலும் தனலட்சுமியிடம் இருந்து பறிக்கப்பட்ட வெற்றி நியாயமாக விளையாடிய விக்ரமன் அணிக்கு வழங்கப்படுகிறது என்று கமல்ஹாசன் தெரிவித்தார். இதனை அடுத்து விக்ரமன் அணியினர் எழுந்து நின்று கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஆனால் அதே நேரத்தில் தனலட்சுமி கண்கலங்கினார். அப்போது கமல்ஹாசன், ’தனலட்சுமி கண் கலங்கும் போது ஆறுதல் சொல்வதும் நான் தான்’ என்று கூறுவதோடு இன்றைய முதல் புரோமோ முடிவுக்கு வருகிறது.

More News

'இரவின் நிழல்' உலகின் முதல் நான்லீனியர் படமா? உண்மையை உடைத்த அமேசான்!

பிரபல இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த 'இரவின் நிழல்' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் கடந்த ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது

என்னை மன்னிச்சிருங்க, தயவுசெஞ்சு இதை ஒளிபரப்பாதீங்க.. பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்ட தனலட்சுமி!

தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் என்றும் இனிமேல் இந்த தவறை நான் செய்ய மாட்டேன் என்றும் இதை ஒளிபரப்பாதீங்க என்றும் பிக்பாஸ் இடம் தனலட்சுமி மன்னிப்பு கேட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெத்துக்கிலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கா: 'யூகி' டிரைலர்

கதிர் மற்றும் கயல் ஆனந்தி நடித்த 'பரியேறும் பெருமாள்' என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் 'யூகி'.

கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமண தேதி எப்போது? 

தமிழ் திரைஉலகில் ஏற்கனவே பல நட்சத்திர ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் சமீபத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தங்கள் காதலை வெளிப்படுத்தினார்

தனலட்சுமி 'பளார்' என்ற அறை வாங்குவார் என கமல் முன் கூறிய அசீம்! என்ன காரணம்?

தனலட்சுமி இங்கே நடந்து கொள்வது போன்று வெளியில் நடந்து கொண்டால் 'பளார்' என்று அறை தான் வாங்குவார் என கமல்ஹாசன் முன்னிலையில் அசீம் கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.