'புரொஜக்ட் கே' படத்தில் இணைந்தது குறித்து கமல்ஹாசன் நெகிழ்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் ’புரொஜக்ட் கே’ படத்தில் இணைந்துள்ளதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரை வரவேற்று தங்களது சமூக வலைதளங்களில் அமிதாப்பச்சன், பிரபாஸ் உள்ளிட்டோர் பதிவு செய்திருந்தனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தில் இணைந்தது குறித்து கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ’50 வருடங்களுக்கு முன்னர் நான் நடன உதவியாளராகவும் உதவி இயக்குநராகவும் இருந்தபோது தயாரிப்பு துறையில் அஸ்வின் தத் பெரிய ஆளாக இருந்தார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் இணைகிறோம். என்னுடன் நடிக்க இருக்கும் பிரபாஸ், தீபிகா உள்ளிட்டவர்களுக்கு எனது நன்றி.
இதற்கு முன்பு அமிதாப் அவர்களுடன் நான் ஏற்கனவே பணி புரிந்தாலும் ஒவ்வொரு முறை அவருடன் பணிபுரியும் போது புதிதாக இருப்பது போல் உணர்வு ஏற்படும். அமிதாப் அவர்கள் ஒவ்வொரு படத்திலும் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறார், அதையேதான் நானும் பின்பற்றுகிறேன்
’புரொஜக்ட் கே’ படத்தை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், இயக்குனர் நாக் அஸ்வின் படைப்புக்கு நாடு முழுவதும் நிச்சயம் பாராட்டு கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
Thank you for the love Amit Ji @SrBachchan
— Kamal Haasan (@ikamalhaasan) June 25, 2023
Looking forward to collaborating with #Prabhas @AshwiniDuttCh @nagashwin7 @deepikapadukone @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms #ProjectK pic.twitter.com/kb5C87HaS3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com