'புரொஜக்ட் கே' படத்தில் இணைந்தது குறித்து கமல்ஹாசன் நெகிழ்ச்சி..!

  • IndiaGlitz, [Monday,June 26 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் ’புரொஜக்ட் கே’ படத்தில் இணைந்துள்ளதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரை வரவேற்று தங்களது சமூக வலைதளங்களில் அமிதாப்பச்சன், பிரபாஸ் உள்ளிட்டோர் பதிவு செய்திருந்தனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் இணைந்தது குறித்து கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ’50 வருடங்களுக்கு முன்னர் நான் நடன உதவியாளராகவும் உதவி இயக்குநராகவும் இருந்தபோது தயாரிப்பு துறையில் அஸ்வின் தத் பெரிய ஆளாக இருந்தார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் இணைகிறோம். என்னுடன் நடிக்க இருக்கும் பிரபாஸ், தீபிகா உள்ளிட்டவர்களுக்கு எனது நன்றி.

இதற்கு முன்பு அமிதாப் அவர்களுடன் நான் ஏற்கனவே பணி புரிந்தாலும் ஒவ்வொரு முறை அவருடன் பணிபுரியும் போது புதிதாக இருப்பது போல் உணர்வு ஏற்படும். அமிதாப் அவர்கள் ஒவ்வொரு படத்திலும் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறார், அதையேதான் நானும் பின்பற்றுகிறேன்

’புரொஜக்ட் கே’ படத்தை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், இயக்குனர் நாக் அஸ்வின் படைப்புக்கு நாடு முழுவதும் நிச்சயம் பாராட்டு கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

More News

ரூ.60 லட்சம் வீடு பரிசு பெற்ற சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் இவரா? குவியும் வாழ்த்துக்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமானது சூப்பர் சிங்கர் என்பதும் கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்தது என்பதையும் பார்த்தோம்.

'ஆதிபுருஷ்' படத்தை பங்கமாய் கலாய்த்த சேவாக்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

சமீபத்தில் வெளியான 'ஆதிபுருஷ்' திரைப்படம் வசூலில் சாதனை செய்தாலும் இந்த படம் நெட்டிசன் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது என்பதும் இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்

பிக்பாஸ் தமிழ் சீசன் 7: ஆடிஷனில் கலந்து கொண்ட விஜய் டிவி பிரபலங்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி

உர்பி ஜாவேத் பரவாயில்லை போல.. ஸ்ரேயா சரண் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

பாலிவுட் திரை உலக நடிகைகளில் ஒருவரான உர்பி ஜாவேத் அவ்வப்போது படு கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் அவர் பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு நடிகை ஸ்ரேயா

டைட்டானிக் ரோஸ் மாதிரி இருக்கிங்க.. சுஜாவின் போட்டோஷூட்டுக்கு மாஸ் கமெண்ட்..!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சுஜா வருணி லேட்டஸ்ட் இலங்கை சுற்றுலா புகைப்படங்களை பார்த்து 'டைட்டானிக் ரோஸ் மாதிரி இருக்கீங்க' என்று கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன