தமிழக அரசுக்கு இதைச் செய்யும் ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன்: கமல்ஹாசன் அறிக்கை

  • IndiaGlitz, [Thursday,June 17 2021]

கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் மக்கள் அரசுப் பள்ளிகளை புறக்கணித்து வந்தார்கள் என்றும், இன்று சூழல் மாறி மக்கள் அரசு பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள் என்றும், இதற்கு ஏற்ப பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும் என்றும், இதனை செய்யும் ஆற்றல் தமிழக அரசுக்கு உண்டு என நான் நம்புகிறேன் என்றும் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கூடுதலாக இரண்டு லட்சம் மாணவர்கள் சேரும் வாய்ப்புண்டு என கல்வியாளர்கள் கருதுகிறார்கள். அதற்கேற்ப பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 15% வரை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.

கடந்த காலத்தில், பல்வேறு காரணங்களால் மக்கள் அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்து வந்தார்கள். போதிய வருவாய் இல்லாதவர்களும் கூட கடன் வாங்கியேனும் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்தார்கள். ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்வில் பிள்ளைகளின் கல்வி என்பது பொருளியல் சிக்கலை உருவாக்கும் ஒன்றாகவே இருந்தது.

இன்று சூழல் பெருமளவில் மாறி மக்கள் அரசுப்பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள். இதற்கேற்ப பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மாணவர்கள் ஆங்கிலத்தை தன்னம்பிக்கையோடு பேசவும் எழுதுவதற்கும் தேவையான பயிற்சிகள், ஆன்லைன் வகுப்புகளைத் தங்குதடையின்றி நடத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை அளிக்கப்பட வேண்டும்.

தரமான நூலகங்கள், ஆய்வகங்கள், காற்றோட்டமான வகுப்பறை, சுகாதாரமான குடிநீர், சுத்தமான கழிப்பறை, ஆரோக்யமான மதிய உணவு, நவீன விளையாட்டு உபகரணங்கள் என நம் அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளை விட பன்மடங்கு மேம்பட்டதாக மாற்றமுடியும்.

தமிழக அரசுக்கு இதைச் செய்யும் ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன். இதைச் சாத்தியமாக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சருக்குக் கோரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

நடிகர் அப்பாஸ்க்கு இவ்வளவு பெரிய மகளா? ஹீரோயினியா நடிக்கலாமே?

தமிழ் சினிமாவின் அமுல்பேபி என்று கூறப்பட்ட நடிகர் அப்பாஸ், காதல் தேசம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் விஐபி, பூச்சூடவா, ஜாலி, பூவேலி, ராஜா, படையப்பா, மலபார் போலீஸ் உள்ளிட்ட

அட்லி-ஷாருக்கான் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா? மாஸ் பாடல்கள் நிச்சயம்!

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி, அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை

பட்டமளிப்பு விழாவில் முக்கவசம் அணியாத 11,000 மாணவர்கள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதற்கொண்டு அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு கிடக்கின்றன.

நஸ்ரியாவிடம் இப்படித்தான் காதலை சொன்னேன்… 7 வருடம் கழித்து வெளியான ஃபகத் சீக்ரெட்!

தமிழ் சினிமாவில் “நேரம்”, “ராஜா ராணி” போன்ற சில திரைப்படங்களில் நடித்து இளசுகளின் மனதில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை நஸ்ரியா.

கங்கை ஆற்றில் மிதந்துவந்த பிஞ்சு குழந்தை… முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா நேரத்தில் கங்கை ஆறு குறித்த எதிர்மறையான செய்திகள் ஊடகங்களில் வரிசை கட்டி நிற்கின்றன.