சரித்திரம்‌ படித்திருந்தால்‌ இதெல்லாம் புரிந்திருக்கும்: விவசாயிகளுக்கு ஆதரவாக கமல்ஹாசன் அறிக்கை

உலகநாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஆக்கபூர்வமான அரசியல் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நிறுத்தப்படுவது குறித்த தகவல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

உலகமே பசுமை விவசாயத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கும்‌ வேளையில்‌, தமிழக விவசாயிகளை 8 வழிச்சாலை, நெடுவாசலில்‌ ஹைட்ரோகார்பன்‌, கொள்முதல்‌ விலை, கடன்‌ பிரச்சினை, மின்சார சட்டதிருத்த மசோதா - 2020 என போராடிக்‌ கொண்டேயிருக்கும்‌ நிலையில்‌ வைத்திருப்பது யார்‌ தவறு?

விவசாயிகளுக்கு எதிராக புது சட்ட திருத்தங்கள்‌ வருகிறது என கவலையும்‌, பயமும்‌ அவர்களிடம்‌ அதிகம்‌ இருக்கிறது. வெற்று நிலத்தை விளைநிலமாக்கி, உணவும்‌, உடையும்‌, பொருளாதாரத்தின்‌ அடித்தளத்தையும்‌ கட்டமைக்கும்‌ விவசாயிகள்‌ தான்‌ நம்‌ பலம்‌, நலம்‌, எதிர்காலம்‌ எல்லாம்‌. அதை நாம்‌ பல முறை உறுதி படுத்தி கொண்டே இருக்கிறோம்‌.

மின்சார சட்ட திருத்த மசோதா - 2020, விவசாயிகளுக்கு வழங்கப்படும்‌ இலவச மின்சாரத்தை குறிவைக்கிறது. பல்லாண்டு போராட்டங்களுக்கு பின்‌ விளைவிப்பவர்களுக்கு கிடைத்திருக்கும்‌ உதவி இலவச மின்சாரம்‌. கடந்த 4 வருடங்களாக புதிய இணைப்புக்களை வழங்காமல்‌, தட்கல்‌ முறையில்‌ மட்டுமே 4இலட்சம்‌ ரூபாய்‌ கட்டி, புதிய இணைப்பு எடுக்கும்‌ நிலைக்கு விவசாயிகள்‌ தள்ளப்பட்டுள்ளனர்‌. மூலப்பொருட்கள்‌ விலை உயர்வு, தண்ணீர்‌ தட்டுப்பாடு, நிலையில்லா கொள்முதல்‌ விலை என ஏற்கனவே பலமுனைகளில்‌ போராடிக்‌ கொண்டிருக்கும்‌ விவசாயிகள்‌ மேல்‌ இந்தச்‌ சுமையையும்‌ ஏற்றத்‌ துடிக்கிறது
இந்த அரசு.

இலாபகரமாக அரசை நிர்வகிக்க முடியவில்லை என்றால்‌ அதைச்‌ சரிசெய்ய வழிகளைக்‌ கண்டறிய வேண்டும்‌. விவசாயிகளுக்கு வழங்கப்படும்‌ சிறு உதவியை உங்களின்‌ நிர்வாகத்திறமை இன்மையால்‌ நிறுத்தி விடாதீர்கள்‌. விவசாயிகளை வஞ்சித்த தேசங்களின்‌ நிலை என்ன என்பதை சரித்திரம்‌ படித்திருந்தால்‌ புரிந்திருக்கும்‌.

விளைவிப்பவர்களின்‌ வாழ்க்கைப்‌ போராட்டத்தை அதிகப்படுத்தாமல்‌, அவர்களை சிரமத்தில்‌ ஆழ்த்தும்‌ மின்சார சட்ட திருத்த மசோதா - 2020ஐ திரும்ப பெற வேண்டும்‌. பெயரளவில்‌ பாதிப்புக்கள்‌ வராது என அறிவிக்காமல்‌ அதை அரசு உத்தரவாக செயல்படுத்த வேண்டும்‌.

பொருள்‌ ஈட்டும்‌ உங்கள்‌ போட்டியில்‌ விவசாயிகளை பகடைக்‌ காய்‌ ஆக்காதீர்கள்‌. விவசாயிகளுக்காக, அவர்களது உரிமையை பாதுகாக்க, எம்‌ குரலும்‌ ஓயாது ஒலிக்கும்‌.

More News

இந்தியாவில் பயங்கரவாத அமைப்புகளா??? ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

இந்தியாவின் கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இருப்பதாக ஐ.நா. சபை அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருக்கிறது.

அஜித் குறித்து வனிதாவின் டுவீட்: ரசிகர்களின் ரியாக்சன்

சமீபத்தில் பீட்டர்பால் என்பவரை வனிதா திருமணம் செய்ததால் ஏற்பட்ட சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த திருமணம் குறித்து நடிகை கஸ்தூரி,

தனுஷின் 'கர்ணன்' படம் குறித்த முக்கிய அப்டேட்: ரசிகர்கள் குஷி!

தமிழ் சினிமாவின் பிசியான ஹீரோக்களில் ஒருவர் தனுஷ் என்பது தெரிந்ததே. ஏற்கனவே அவர் நடித்த 'கர்ணன்' மற்றும் 'ஜகமே தந்திரம்' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் மட்டும் போஸ்ட் புரொடக்ஷன்

மகள்களுடன் நிலத்தை உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்த பிரபல நடிகர்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுது விவசாயம் செய்ய முடிவு செய்த போது அவரிடம் காளை மாடுகளை வாடகைக்கு எடுக்க கூட பணம் இல்லை.

டிடிவி தினகரன் மகளுக்கு நிச்சயதார்த்தம்: காங்கிரஸ் பிரமுகர் மகனை மணக்கிறார்!

தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் டிடிவி தினகரன். இருபெரும் திராவிட கட்சிகளான அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளையே எதிர்த்து சுயேச்சையாக