ஜனவரி 26 முதல் ஆரம்பம்: கமல்ஹாசன் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜனவரி 26 முதல் தனது புதிய பிசினசை தொடங்க இருப்பதாக உலக நாயகன் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வரும் கமல்ஹாசன் இந்திய திரையுலகின் லேட்டஸ்ட் டெக்னாலஜியை புகுத்தியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு என்பது தெரிந்ததே
இந்த நிலையில் திரையுலகம் மட்டுமின்றி அரசியல் உலகத்திலும் அவர் ஈடுபட்டு வருகிறார் என்பதும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து அவர் ஒரு பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒரு சட்டமன்ற தேர்தலில் சந்தித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திரைஉலகம், அரசியலை அடுத்து தற்போது பிசினஸில் இறங்கியுள்ளார். மகாத்மா காந்தி, கர்மவீரர் காமராஜர் போன்றவர்கள் போற்றிய கதர் ஆடையை லேட்டஸ்ட் பேஷனாக அளிக்கும் பிசினஸை தொடங்க இருப்பதாக கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இதற்கான புரமோஷன் விழாவுக்காக சமீபத்தில் நியூயார்க் சென்று வந்த கமலஹாசன், ஜனவரி 26 முதல் ஆன்லைன் மூலம் கதர் பிசினஸ் தொடங்க இருப்பதாகவும், இந்த முயற்சியில் ஏழை நெசவாளர்களுக்கு மக்களின் ஆதரவு தேவை என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாடுவோம் அதேபோல் மிகச்சிறிய அளவில் நெசவாளர்களையும் கொண்டாடுவோம் என்றும், எங்களின் இந்த புதிய முயற்சியையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்று அவர் கேட்டு கொண்டுள்ளார்.
Let's have a large celebration for our Republic Day.
— Kamal Haasan (@ikamalhaasan) January 16, 2022
And a smaller one for #khhk.
KHHK is coming to you .
Celebrate Khaddar, remember us.
Thanks for all the enquiries and love . #KHHK COMING ONLINE JANUARY 26th INSTANT. pic.twitter.com/ev75gwM8Is
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com