close
Choose your channels

'இந்தியன் 2' படத்தின் முக்கிய பணியில் கமல்-ஷங்கர்.. வைரல் வீடியோ..!

Tuesday, October 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதனை அடுத்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்தின் முக்கிய பணிகளில் ஒன்றான டப்பிங் தற்போது ஆரம்பமாகியுள்ளது. முதல் கட்டமாக கமல்ஹாசன் தனது பகுதியின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். டப்பிங் தியேட்டரில் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இருக்கும் வீடியோ படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

டப்பிங் மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்த உடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசன், சித்தார்த், எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசாகர், விவேக், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மனோபாலா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியான், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் ’இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment