'என் ஜெயமோகன்': 'கரு பழனியப்பனுக்கு பதிலடி தருகிறாரா கமல்ஹாசன்!

  • IndiaGlitz, [Wednesday,April 22 2020]

நடிகரும் இயக்குனருமான கரு பழனியப்பன் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் எழுத்தாளரும் திரைக்கதை, வசனகர்த்தாவுமான ஜெயமோகன் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய டுவிட்டை பதிவு செய்திருந்தார். அதில் ‘சாதிப்படி நிலை மேலிருக்கும் அழகிகள் அனைவரும் கண்டு வியந்த , பொறாமைப்பட்ட, ஈடேற முடியாத, சாதிப் படிநிலையில் கீழிருந்து மேல் எழுந்த அழகி சில்க் ஸ்மிதா ... எழுத்தர் ஜெயமோகன் கவனத்திற்கு... (எழுத்தாளர் அல்ல , எழுத்தர் என்பதை அறிந்தே எழுதினேன்! ) என்று குறிப்பிட்டிருந்தார்.

கரு பழனியப்பனின் இந்த டுவீட்டுக்கு ஒருசில ஆதரவும் பெரும்பாலான கண்டனங்களும் பதிவாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது: என் ஜெயமோகன்” என்று முந்திக்கொண்டு கொண்டாடுகிறேன். நாளை தமிழ் கூறும் நல்லுலகம் வழி மொழியும். கேளுங்கள் “வாழும் அறிஞனின்” பேச்சை’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘மய்யம்’ சமூக வலைத்தள பக்கத்தில் இன்று ‘இலக்கியமும் சினிமாவும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் குறித்து தன் பார்வையையும் அனுபவங்களையும் கமல்ஹாசன் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கரு பழனியப்பனின் நேற்றைய டுவீட்டுக்கு கமல்ஹாசனின் பதிலடியா? அல்லது தற்செயலாக ஜெயமோகன் குறித்து கமல்ஹாசன் பேசவுள்ளாரா? என்பது தெரியவில்லை என்றாலும் இரண்டையும் இணைத்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேற தடை: உத்தரவு பிறப்பித்த டிரம்ப்

உலகிலேயே மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, கொரோனா தாக்கம் காரணமாக ஏராளமான வேலையிழப்புகளையும் பொருளாதார சிக்கலையும் சந்தித்து வருகிறது.

அமலாபால் டுவிட்டுக்கு அசத்தலான பதில் கூறிய விஷ்ணுவிஷால்

நடிகர் விஷ்ணுவிஷாலும் அமலாபாலும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு வதந்தி பரவி பின்னர் இருதரப்பினர் தந்த விளக்கத்தால் அந்த வதந்தி முடிவுக்கு வந்தது

ஜியோ பங்குகளை பல்லாயிரம் கோடிக்கு வாங்கிய ஃபேஸ்புக்!

இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பங்குகளை உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் வாங்கி உள்ளது. ஜியோவின் 9.9 சதவீத பங்குகளை

கொரோனா குடும்பத்தின் முதல் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட கதை!!!

கொரோனா குடும்பத்தில் இதுவரை 7 வைரஸ்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

இசை பிரபலங்களுடன் இணைந்து கமல்ஹாசன் உருவாக்கிய 'நம்பிக்கை' பாடல்!

கொரோனா விடுமுறை பல நட்சத்திரங்கள் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் கமல்ஹாசன், 'மக்களுக்கு நம்பிக்கை தரும் ஒரு பாடலை எழுதியுள்ளார்