ரோலக்ஸ் சாருக்கு கமல்ஹாசன் அளித்த பரிசு என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய ஹிட்டாகி உள்ளது என்பதும் இந்த படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது தெரிந்ததே.
இந்த படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்த சூர்யா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யாவுக்கு கமல்ஹாசன் சிறப்பு பரிசு வழங்கியுள்ளார். அந்த சிறப்பு பரிசு என்னவெனில் விலை மிகுந்த ரோலக்ஸ் கைக்கடிகாரம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்களை சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து கமலஹாசனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கமலஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசளித்தார் என்பதும் உதவி இயக்குனர்களுக்கு பைக் பரிசளித்தார் என்பது பார்த்தோம். தற்போது ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசு அளித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
A moment like this makes life beautiful! Thank you Anna for your #Rolex! @ikamalhaasan pic.twitter.com/uAfAM8bVkM
— Suriya Sivakumar (@Suriya_offl) June 8, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com