ரஜினியை அடுத்து கமல் ஆறுதல்: ஜெயராஜின் மனைவி, மகளிடம் தொலைபேசியில் பேசினார்

  • IndiaGlitz, [Sunday,June 28 2020]

சாத்தான்குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசியில் ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். முதலில் ஜெயராஜின் மனைவியிடமும், அதன்பின் அவரது மகளிடம் கமல்ஹாசன் ஆறுதல் கூறினர். அதுமட்டுமின்றி மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஜெயராஜ் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன் ஜெய்ராஜ் மனைவி, மகளிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறிய நிலையில் தற்போது கமல்ஹாசனும் ஆறுதல் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.