தண்ணீர் பிரச்சனையை அரசியலுடன் கலந்து பேசிய கமல்ஹாசன்.. பிக்பாஸில் இன்று சம்பவம் இருக்கு..!

  • IndiaGlitz, [Saturday,October 14 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றும் நாளையும் கமல்ஹாசன் தோன்றும் எபிசோடு என்பதால் கூடுதல் விறுவிறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் திடீரென ஸ்ட்ரைக் செய்ததும், தண்ணீரை கூட தர மாட்டேன் என்று மறுத்ததும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கமல்ஹாசன் இன்று நிச்சயம் விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி தண்ணீர் கொடுக்காமல் ஸ்டிரைக் செய்ததை தற்போது காவிரி பிரச்சனையுடன் கலந்து கமல்ஹாசன் மறைமுகமாக பேசிய புரமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒரு புரட்சி போராட்டம் நடத்துனீர்கள், தண்ணீரை கூட கொடுக்காமல் இருப்பது ஒரு போர் யுக்தி, ரைட் அது தவறு என்று சொல்ல முடியாது. ஸ்ட்ரைக் செய்தது நியாயமா நியாயம் இல்லையா என்பது கேள்வி அல்ல, நீங்கள் நியாயத்திற்காக தானே ஸ்டிரைக் செய்தீர்கள்? ஆனால் அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டாமா? முன்னறிவிப்பு இருக்க வேண்டும்.

நீங்க அநியாயம் பண்றீங்க, நாங்க நியாயமாக கொடுக்க வேண்டியதை எதுக்கு கொடுக்கணும் என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியதில் இருந்து அவர் தற்போது இரு மாநிலங்களுக்கு இடையே நடக்கும் காவிரி பிரச்சனையையும் மறைமுகமாக பேசியது போல் இருந்தது.

இன்றைய முழு எபிசோடையும் பார்த்தால் கமல்ஹாசன் வேறு என்னென்ன இதை பற்றி கூறியிருப்பார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.